தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தெலுங்கில் கால்பதிக்கும் 'பிங்க்' - டைட்டில், போஸ்டர் வெளியீடு - லாயர் சாப்

டோலிவுட்டில் ரீமேக்காகும் பிங்க் படத்தின் தலைப்பு, போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பவன் கல்யாண்
பவன் கல்யாண்

By

Published : Jan 21, 2020, 1:58 PM IST

பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் 2016ஆம் ஆண்டு வெளியான படம் 'பிங்க்'. வேலைபார்க்கும் மூன்று பெண் தோழிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளையும் அந்தச் சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை நிலவரத்தையும் அடிப்படையாக வைத்து வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து, 'பிங்க்' திரைப்படத்தை தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்தனர். அமிதாப்பச்சன் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் தல அஜித் நடித்து அசத்தியிருந்தார். பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட்டிலும், இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் சாதனையை படைத்தது.

தெலுங்கில் கால்பதிக்கும் பிங்க்: டைட்டில், போஸ்டர் வெளியீடு

இதையடுத்து தற்போது டோலிவுட்டில் 'பிங்க்' படத்தை ரீமேக்செய்ய முடிவுசெய்துள்ளனர். பவன் கல்யாண் ஹீரோவாக, நடிக்கும் இப்படத்தின் டைட்டில், போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதன்படி படத்திற்கு 'லாயர் சாப்' எனப் பெயர் வைத்துள்ளனர். அப்போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. மேலும் விரைவில் இப்படத்தின் கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:#HBDSanthanam: நகைச்சுவை நடிகராக சந்தானம் கலக்கிய டாப் ஐந்து படங்கள்

ABOUT THE AUTHOR

...view details