தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. தமிழில் 'கேடி' படம் மூலம் வில்லி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, 'கல்லூரி' படத்தில் அவரது பயணத்தை தொடங்கினார்.
தமன்னா புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - ஃபர்ஸ்ட் லுக்
தமன்னா புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை காஜல் அகர்வால், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
சமீபத்தில் பிரபுதேவாவுடன் நடித்த 'தேவி 2' வெளியானதை அடுத்து 'அதே கண்கள்' என்னும் திகில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதையடுத்து அவரது புதுப்படத்தின் பெயரை நடிகை டாப்சி நேற்று வெளியிட, அதனை தொடர்ந்து நடிகை காஜல் அப்படத்தின் டைட்டில் லுக்கை தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்தின் டைட்டிலே அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கிறது. 'பெட்ரோமாக்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ள தமன்னாவின் படத்தில் அவரை மையமாக வைத்து கதை நகரும் என்று கூறுகிறது படக்குழு. 'பெட்ரோமாக்ஸ்' என்னும் பெயரை கேட்டால் கவுண்டமனியின் வசனம் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். அதை தற்போது தமன்னாவின் டைட்டிலாக வைத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு நிறைவடைந்து அதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.