இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவான திரைப்படம் 'பேரன்பு'. இப்படத்தில் மம்மூட்டியுடன் அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஸ்ரீராஜலட்சமி பிலிம்ஸ் சார்பில் தேனப்பன் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி வெளியானது. படம் வெளியவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. அதேபோல் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்பட்டது.