தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

‘மக்கள் சிந்தித்து வாக்களித்தாலே பிரச்னைகள் வராது’ - நடிகர் ராதாரவி - வருமான வரித்துறை சோதனை

தேனி: அமைதியாக நடைபெறும் எந்தவொரு படபிடிப்பையும் யாராலும் தடை போட முடியாது என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

people-think-and-vote-there-are-no-problems
people-think-and-vote-there-are-no-problems

By

Published : Feb 8, 2020, 10:33 PM IST

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே புதிதாகத் தொடங்கப்பட்ட தனியார் சிமெண்ட் கடையை நடிகரும், பாஜக உறுப்பினருமான ராதாரவி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், பணம், பதவி வாங்கிக்கொண்டு கட்சி மாறுவதில்லை. பிடிக்கவில்லை என்றால் விலகிச் சென்றுவிடுவேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அறிமுகம் இல்லாதவர்கள் தேவையில்லாமல் கொடுப்பதை வாங்காமல் சிந்தித்து வாக்களித்தாலே எந்தவித பிரச்சினைகளும் வராது. நாடு முன்னேற்றம் அடையும். விவசாயிகள் சிந்திக்க வேண்டும், அதை விட்டு டெல்லியில் போய் எலியைக் கடிக்க வேண்டாம்” என்றார்.

இதனையடுத்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “வருமான வரித்துறைக்கு கிடைத்தத் தகவலின் அடிப்படையில் விஜய் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். இது சகஜம்தான், விஜய் வீட்டில் ஏதும் கைப்பற்றப்படவில்லை. இதில் எந்த அரசியலும் இல்லை. இதனைக் காழ்புணர்ச்சியாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என்றார்.

மக்கள் சிந்தித்து வாக்களித்தாலே பிரச்னைகள் வராது - நடிகர் ராதாரவி

மேலும், நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தது குறித்த கேள்விக்கு, அனுமதியோடு நடத்தப்படுவதை யாரும் தடைபோட முடியாது என்று ராதாரவி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ‘அனைவருக்கும் பிடித்த படமாக ஓ மை கடவுள் இருக்கும்’ - படக்குழுவினர் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details