தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பழகிய நாட்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! - பழகிய நாட்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

வித்தியாசமான கதைகளத்தோடு உருவகியுள்ள பழகிய நாடகள் படத்தின் "ஃபர்ஸ்ட் லுக்" வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட இயக்குனர்கள் இதனை வெளியிட்டுள்ளனர்.

palagiya natkal firstlook
palagiya natkal firstlook

By

Published : Dec 10, 2020, 10:34 PM IST

சென்னை : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகின்றன. குறிப்பாக, சிறிய பட்ஜெட் படங்களில் சமீபகாலமாக பெரிய அளவில் வெளியாகின்றன. சிறிய பட்ஜெட் படங்களில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வகையில் முழுக்க முழுக்க மாறுபட்ட கதை களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "பழகிய நாட்கள்". ராம்குமாரின் ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை ராம்தேவ் இயக்கியுள்ளார்.

பழகிய நாட்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மீரான், மேகனா, செந்தில் கணேஷ், ஸ்ரீநாத், வின்சன்ட் ராய், நெல்லை சிவா, சிவக்குமார் மற்றும் சுஜாதா என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் அழகிய "ஃபர்ஸ்ட் லுக்" போஸ்டரை இயக்குனர்கள் பேரரசு, ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் இணைந்து இன்று வெளியிட்டனர்.

இந்த "ஃபர்ஸ்ட் லுக்" போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. காதலர்கள் ரசிக்கும் படமாக பழகிய நாட்கள் திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:விஜய் சேதுபதியின் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படப்பிடிப்பு தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details