தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

குழந்தைபோல பார்த்துக்கொண்டார் - பாவனி கண்ணீர்! - bigg boss 5 promo

நடிகை பாவனி உயிரிழந்த தனது கணவரை நினைத்து வருந்தும் காட்சி இன்றைய பிக்பாஸ் புரொமோ காணொலியில் இடம்பெற்றுள்ளது.

பாவனி
பாவனி

By

Published : Oct 8, 2021, 11:19 AM IST

ரசிகர்கள் நீண்ட நாள்களாக எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் தொடங்கி நான்கு நாள்கள் நிறைவடைந்துள்ளது. 17 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ள இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் ஐந்தாவது நாளுக்கான முதல் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பாவனி ரெட்டி தான் கடந்துவந்த பாதை குறித்து சகப் போட்டியாளர்களிடம் விவரிக்கிறார்.

அதில், "என் கணவர் உயிரிழந்தபோது எனக்கு அழுகை வரவில்லை. அவர் மீது எனக்கு கோபம்தான் வந்தது. நாங்கள் இருவரும் நிறைய கனவுகண்டு வைத்திருந்தோம். ரொம்ப கஷ்டப்பட்டோம். அப்படி இருக்கும் சூழலில், அவர் என்னை விட்டுச் சென்றது கோபத்தை ஏற்படுத்தியது.

நான் அவரை அதிகம் காதலிக்கிறேன். அவர் என்னை ஒரு குழந்தைபோல பார்த்துக்கொண்டார். எனக்குத் தெரிந்தவரை நான் என் வாழ்க்கையில் தனியாக இருக்கணும் என எழுதி இருக்கிறதுபோல" எனக் கண்ணீருடன் அவர் கூறும் புரொமோ முடிகிறது.

இதையும் படிங்க:பிக்பாசில் வெடித்தது மோதல் - இமான் அண்ணாச்சி தான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details