தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ் ஆகும் 'பசும்பொன் தேவர் வரலாறு' - பசும்பொன் தேவர் வரலாறு

சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான 'பசும்பொன் தேவர் வரலாறு' ட்ரெய்லர் நாளை வெளியாகிறது.

பசும்பொன் தேவர்
பசும்பொன் தேவர்

By

Published : Oct 28, 2020, 8:00 PM IST

நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்குப் பாடுபட்டவர் தென்னாட்டு நேதாஜி என்று அழைக்கப்படும் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.

இவரின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படமான 'பசும்பொன் தேவர் வரலாறு' மீண்டும் டிஜிட்டலில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லரை இயக்குநர் பாரதிராஜா நாளை (அக். 29) வெளியிடுகிறார்.

பல முன்னணி நாளிதழ்களில் மூத்த செய்தியாளராகப் பணியாற்றிய எம்.பி. ஆபிரகாம் லிங்கன் இந்த வரலாற்றுப் படத்திற்கான வசனம் எழுதி இயக்கி இருக்கிறார். விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கும் இந்தப் படத்திற்கு ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஏற்கனவே 2008ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

அப்போது இந்த ஆவணப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அத்தோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் திரையரங்கில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது.

இப்போது அந்தப் படத்தின் டிஜிட்டல் வடிவம் தேவர் குருபூஜை தினமான அக்டோபர் 30ஆம் தேதி இணையத்தில் வெளியாக உள்ளது.

விளம்பரத் துறையில் கோலோச்சிவரும் 'பிக்பிரிண்ட் பிக்சர்ஸ்' கார்த்திகேயன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details