தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு! - அண்மைக்கால தேவர் செய்தி

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை இயக்குநர் அரவிந்தராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

By

Published : May 31, 2020, 7:44 PM IST

தமிழ் சினிமாவில் ஒருவரது வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுப்பதும், அதற்குத் தனி மதிப்பு கிடைப்பதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தற்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக இயக்குநர் அரவிந்தராஜ் இயக்கவுள்ளார். 'தேசிய தலைவர்' என்று பெயரிட்டுள்ள இப்படத்தில், ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக நடிக்கிறார்.

"முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்" புத்தகத்தை தழுவி, இப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பணி, முடிவுடைந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details