'மிருகம்', 'ஈரம்', 'அரவான்', 'யூ-டர்ன்', 'மரகதநாணயம்' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றவர் நடிகர் ஆதி. இவர் அடுத்து 'பார்ட்னர்' எனும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஆதியுடன் முதல் முறையாக ஹன்சிகா முதல் முறையாக நடிக்கிறார். நடிகை ஹன்சிகாவை முதன்மை கதாப்பாத்திரமாக கொண்டு தயாராகும் இப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பல்லக் லால்வானிநடிக்கிறார்.
ஆதியின் புதிய 'பாட்னர்' ஆனார் ஹன்சிகா! - aadhi
நடிகர் ஆதி-ஹன்சிகா முதன் முதலாக இணைந்து நடிக்கும் 'பாட்னர்' படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியது.
இவர்களுடன் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோசங்கர், விடிவி கணேஷ், ஜான்விஜய், ரவிமரியா, 'டைகர்' தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர். இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியது. விரைவில் படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து இயக்குநர் மனோஜ் தாமோதரன் கூறுகையில், இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. ரசிகர்களை கவரும் வகையில் இந்தபடத்தில் சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஒரு பேண்டஷி விஷயமும் உள்ளது . படத்தில் மிக முக்கிய அம்சமாக பேசப்படும் அளவிற்கு ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது கேரியரில் முக்கியமான படமாக அமையும். இந்தப் 'பாட்னர்' நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்றார்.