நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக உதவி இயக்குநர் ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
சர்ச்சையை கிளப்பும் பார்த்திபனின் விளக்கம்..! - assistant director jeyamkondan
சென்னை: உதவி இயக்குநர் ஜெயங்கொண்டான் அளித்த புகார் குறித்து நடிகர் பார்த்திபனை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கோபாமாக பதில் அளித்துள்ளார்.
பார்த்திபன்
இந்நிலையில், இதுகுறித்து ஈ.டி.வி பாரத் செய்தியாளர் தொலைபேசியின் வாயிலாக நடிகர் பார்த்திபனிடம் கேட்ட போது, 'தெருவில் நடக்கும் யாராவது என் மீது புகார் கொடுத்தால், அது குறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக நான் எதுவும் பேசவும் விரும்பவில்லை' என பதிலளித்துவிட்டு அழைப்பை கோபத்துடன் துண்டித்தார்.