இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதியக் கொடுமையை பற்றி ஆழமாக பேசியிருந்த இந்த திரைப்படம் பல்வேறு விருதுகள் வாங்கியுள்ளது. ஆனால், தேசிய விருது மட்டும் இத்திரைப்படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால் பலரும் விழா கமிட்டி மீது அதிருப்தி கொண்டனர்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு அரசு விருது - நாராயணசாமி
புதுச்சேரி: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
pariyerum perumal
இந்நிலையில், புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. வரும் 13ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி இயக்குநர் மாரி செல்வராஜூக்கு இவ்விருதை வழங்க இருக்கிறார்.