தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சைக்கோ' பட பாணியில் இணையத்தை அதிர வைத்த பரினீதி சோப்ரா - சைக்கோ

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Parineeti chopra

By

Published : Aug 21, 2019, 7:26 PM IST

பாலிவுட் முன்னணி நடிகைகளாக வலம் வருபவர்களில் பரினீதி சோப்ராவும் ஒருவர். இவர் பாலிவுட்டில் டாப் ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். அதே போல் சமூக வலைதளங்களிலும் பயங்கர ஆக்டிவாக செயல்படுகிறார்.

பரினீதி சோப்ரா நடிப்பில் வெளி வந்த 'கோல்மான் எகெய்ன்', 'மேரே பியாரி பிந்து', 'கேசரி' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு வெளியாக உள்ள 'தி கேர்ள் ஆன் தி ட்ரெயின்' (The Girl On The Train) ஹாலிவுட் ரீமேக் படத்தின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

இப்புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது குறித்து பரினீதி சோப்ரா கூறுகையில், இது போல நான் செய்தது இல்லை. என் வாழ்க்கையில் மிக கடினமான கேரக்டர் இது என அவர் கூறியுள்ளார்.

இந்த புகைப்படமானது பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஹிட்ச்காக்கின் 'சைக்கோ' படத்தில் ஒரு குளியலறையில் கதாநாயகி கொல்லப்படும் காட்சியை நினைவில் வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details