இயக்குநர் பாலா அரன் இயக்கத்தில் டார்க் காமெடி என்டர்டெயினர் படமாக உருவாகியுள்ளது 'பன்றிக்கு நன்றி சொல்லி'. இப்படத்தில் நிஷாந்த், விஜய் சத்யா, செல்லா, பாலாஜி, மு.சந்திரகுமார், வியன், பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஹெட் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். சுரேன் விகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ராம் சதீஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.
'செத்தாண்டா சேகரு..!' - கலகலப்பான 'பன்றிக்கு நன்றி சொல்லி' டீசர் - movie teaser
முழுக்க முழுக்க புதுமுகங்களால் நிரம்பி வழியும் 'பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு நல்ல கதையை வரவேற்பையும் ஆதரவு தர மறுத்ததில்லை. இத்திரைப்படம் டார்க் காமெடி படமாக உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் காட்டப்படாத பகுதி என்று சொல்லி ஏமாற்றுவதை விட, பத்தாம் நூற்றாண்டில் கோடி மதிப்பில் உள்ள ஒரு புதையலை தேடி செல்வதே படத்தின் கதை.
படத்தின் டீசரே படத்தின் முழுக்கதையை சொல்லியதுபோல் உணரவைக்கிறது. டீசரில் ஆரம்பிக்கப்ட்ட காட்சிகள் முதல் முடியும் கடைசி நொடி வரை நகைச்சுவையால் நிறைந்துள்ளது. ஜனரஞ்சகமாக இந்தக் காலச்சூழலுக்கேற்ப இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.