தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'மகளின் கண்ணீரைத் துடைக்க என்னிடம் வார்த்தையில்லை' - மாறனுக்கு ரஞ்சித் இரங்கல்

தந்தையின் முகத்தைக்கூட பார்க்கமுடியவில்லை என அழுத மாறனின் மகளைத் தேற்றுவதற்கு தன்னிடம் வார்த்தையில்லை என்று இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் மாறனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

actor maran, நடிகர் மாறன், ACTOR MARAN DEATH, நடிகர் மாறன் மரணம், RANJITH CONDOLENCES TO ACTOR MARAN, DIRECTOR RANJITH, நானும் ரவுடி தான், டிஷ்யூம், கில்லி படத்தில் நடிகர் மாறன், கில்லி படத்தில் கபடி கபடி பாடலை பாடியவர், கில்லி திரைப்படம், MARAN
PA RANJITH condolence for actor maran

By

Published : May 12, 2021, 11:01 PM IST

சென்னை: 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் நடித்த மாறன் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். இவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இச்சூழலில், சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (மே 11) அவர் உயிரிழந்தார். இதையடுத்து, நடிகர் மாறனுக்கு ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், "கடக்க முடியாத துயரம்... எப்போதும் கட்டுக்கடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தைக் கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள்-ணா!! என்னிடம் தேற்றுவதற்கு வார்த்தைகள் இல்லை.. நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள்.." என்று பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கும் 'சார்பட்டா பரம்பரை' திரைப்படத்தில் நடிகர் மாறன், "மாஞ்சா கண்ணன்" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நடிகர் மாறன்: கலைஞனின் மரணம் எளிதில் கடக்கக்கூடியதா..?

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details