நீட் தேர்வு அச்சம் காரணமாகச் சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீயும், அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரும் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து இன்று (செப்.12) காலை மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டார்.
'தமிழ்நாடு அரசு இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணைப்போக இருக்கிறது?' - இயக்குநர் பா.ரஞ்சித் காட்டம்! - Neet fear
நீட் அச்சம் காரணமாக மாணவி ஸ்ரீதுர்கா தற்கொலை செய்து கொண்டது குறித்து, இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இவரின் இந்த மறைவு தமிழ்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் ஸ்ரீதுர்கா மறைவு குறித்துப் பதிவு வெளியிட்டு வருகின்றனர்
அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அரியலூர் மாணவர் விக்னேஷ் மரணமடைந்த சில நாட்களுக்குள்ளாகவே, மதுரை மாணவி ஜோதிஶ்ரீ துர்காவை நீட்தேர்வு படுகொலை செய்திருக்கிறது. நீட் தேர்வு குறித்த உறுதியற்ற நிலைப்பாடால் தமிழ்நாடு அரசு இன்னும் எத்தனை மாணவர்களை கொல்ல துணைப்போக இருக்கிறது?" என்று பதிவிட்டுள்ளார்.