'மகா மகா', 'நுண்ணுணர்வு' போன்ற படங்களை இயக்கி கதாநாயகனாக நடித்த மதிவாணன் அடுத்து இயக்கி நடிக்கும் திரைப்படம் 'ஒற்று'. சக்தி ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் இந்திரா, மகாஸ்ரீ, உமா, உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு மதிவாணனே கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
காதல் காட்சி இல்லா திரில்லர் ஜானரில் உருவாகும் 'ஒற்று'! - ஒற்று
சென்னை: எழுத்தாளர் ஒருவரின் கதையை திரில்லர் ஜானரில் சொல்லும் படமாக 'ஒற்று' திரைப்படம் உருவாகியுள்ளது.
ஒரு எழுத்தாளர் பார்வை திறன் அற்ற ஒரு பெண்ணை சந்திக்கிறார். அந்தப் பெண்ணிற்கு ஒரு பிரச்னை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அப்பெண்ணின் பிரச்சனையை எழுத்தாளர் எவ்வாறு எதிர்கொண்டு முடிக்கிறார் என்பதை குடும்பப்பாங்காகவும், திரில்லர் ஜானரிலும் சொல்லுவதே 'ஒற்று' திரைப்படம். மனதை வருடும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படத்தில் பாடல்கள், காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இல்லை.
ஊட்டி, குன்னூர் போன்ற மலை சார்ந்த இடங்களில் தொடர்ந்து 35 நாட்கள் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைப்பெற்று வருகின்றன.