நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் ஓ பேபி. இப்படம் வெளிவந்து தெலுங்கு ரசிகர்களிடம் நல்லவரவேற்பு பெற்றுள்ளது. இப்படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் - பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரித்துள்ளது.
தெலுங்கில் ஓஹோன்னு ஓடிய 'ஓ பேபி' தமிழிலும்! - ஓ பேபி
நடிகை சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'ஓ பேபி' திரைப்படம் தமிழில் வெளியாக உள்ளது.
oh baby
இப்படம் 70 வயது பெண்மணி, ஒரு புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20 வயது மங்கையாக மாறி விடுகிறார். ஒரு முதியவர் இளமை திரும்பினாலும், தனது குடும்பத்தை எப்படி பாதுகாக்கிறார் என்பதை கற்பனை கலந்து அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். தெலுங்கில் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, தமிழ் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அதன்படி, இப்படம் தமிழிலும் ஓ பேபி என்ற பெயருடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகிறது.