தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அரசியல் நையாண்டி தெறிக்கும் வசனத்துடன் 'ஒபாமா உங்களுக்காக' டீசர் - teaser

சாதியம், நீட், தமிழரின் பிரச்னை, போராட்டங்கள் என உயிர்ப்பிக்கும் வகையில் அறிமுக இயக்குநர் நாநி பாலா இயக்கியுள்ள 'ஒபாமா உங்களுக்காக' என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ஒபாமா உங்களுக்காக

By

Published : Mar 12, 2019, 2:47 PM IST

இந்த டீசரில் தொடக்கமே அமர்க்களமாக உள்ளது. கதையின் நாயகனாக தொலைபேசி என ஆரம்பிக்கும் இந்த டீசரில், நீட் முதல் அரசியல் பிரமுகர் ஒருவர் பெண்ணுடன் கடலை போடும் ஆடியோ வரை இடம்பெற்றுள்ளன.

ஒபாமா உங்களுக்காக

இதற்கு முன்னதாக வந்த படங்களில் அரசியலை கிண்டல் கேலி செய்வதுபோல் வந்திருந்தாலும் இந்த டீசர் ஆரம்பம் முதல் எண்ட் கார்டு வரை தற்போது தமிழகத்தில் நடக்கும் அரசியல் பிரச்னைகளை தோலுரித்துக்காட்டியுள்ளன.

யூட்யூப் தளத்தில் முக்கிய பிரபலங்களான கவிஞர் வைரமுத்து, பழ.கருப்பையா,

இயக்குநர் பா.ரஞ்சித், சுப.வீரபாண்டியன், சசிகலா, சர்ச்சைக்கு பேர் போன ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் காணொளிகளை வைத்து படத்தின் டீசரை உருவாக்கப்பட்டுள்ளன.

சாதியம், நீட், தமிழரின் பிரச்னை, போராட்டங்கள் என உயிர்ப்பிக்கும் வகையில் இவை உள்ளன. அதில், ஹெச்.ராஜாவின் தெறிக்கும் பன்ச் டயலாக், ஜெயலலிதா சமாதியில் சசிகலா சபதம் போட்டு சத்தியம் செய்தல், பிரபலமான அமைச்சர் ஒருவர் அந்த வீடு உனக்கு தெரியுமில்ல... அங்கே வந்துடும்மா! உள்ளிட்ட அரசியல்வாதிகளை மையம்வைத்து வசனங்கள் இடம்பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயசீலன் என்பவர் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார், பி.லெனின் எடிட் செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த டீசரை நெட்டிசன்கள் வலைதள பக்கங்களில் மீம்ஸ் போட்டு கொண்டாடிவருகின்றனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details