தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

Thalaivar168: முதற்கட்ட படப்பிடிப்பு ஓவர் - தலைவர் 168 அப்டேட்

'தலைவர் 168' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

Thalaivar168
Thalaivar168

By

Published : Jan 8, 2020, 7:15 PM IST

ரஜினியின் 168ஆவது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். முன்னதாக 'எந்திரன்', 'பேட்ட' படத்தினை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது ரஜினியின் மூன்றாவது படத்தினைத் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜார்ஜ் மர்யன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் ரஜினி, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படப்பிடிப்பின்போது தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷூக்கு படக்குழு சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது ரஜினி கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.

தற்போது ரஜினி இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். விரைவில் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை படக்குழுத் தொடங்க இருக்கிறது.

இதையும் படிங்க:

புதிய படம் மூலம் மீண்டும் களமிறங்கும் 80-களின் நாயகன் மோகன்

ABOUT THE AUTHOR

...view details