தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தள்ளிப்போன 'மிக மிக அவசரம்' ரிலீஸ்! - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

பெண் காவலர்களின் அவஸ்தைகளையும், அவமானங்களையும் 95 நிமிடங்கள் எடுத்துரைத்து அனைவரையும் கண் கலங்க வைக்கும் விதமாக மிக மிக அவசரம் படம் அமைந்துள்ளது.

மிக மிக அவசரம் திரைப்படம்

By

Published : Oct 10, 2019, 2:26 PM IST

சென்னை: அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகவிருந்த மிக மிக அவசரம் பட வெயியீடு கடைசி நேரத்தில் தள்ளிப்போயுள்ளது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ளார். விஜய்யின் புதிய கீதை, ராமன் தேடிய சீதை படங்களை இயக்கிய ஜெகன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.

ஸ்ரீபிரியங்கா, வழக்கு எண் 18/9 முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெண் காவலர்களுக்கு மேலதிகாரிகளால் ஏற்படும் அவஸ்தைகளையும், அவமானங்களையும் அடிப்படையாக வைத்து படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது.

சமீபத்தில் இந்தப் படம் பத்திரிகையாளர்களுக்கு சிறப்புக் காட்சியாக காட்டப்பட்டது. இதையடுத்து படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், அக்டோபர் 11ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டரில், 11ஆம் தேதி வெளியாகவிருந்த #மிகமிகஅவசரம் படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் வெளியீடு அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது. இப்படம் அக்டோபர் 18இல் வெளியாகும். பாராட்டில் குளிர்வித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவை தொடர்ந்து தரக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details