தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'சார்பட்டா' பரம்பரை இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு அதிமுக அனுப்பிய நோட்டீஸ் - ஏன் தெரியுமா? - sarpatta paramabarai

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் அதிமுக குறித்து உண்மைக்குப் புறம்பான காட்சிகளை வைத்து இருப்பதாக, அப்படத்தின் இயக்குநர் பா. இரஞ்சித் மீது அதிமுக வழக்கறிஞர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் அதிமுக தொடர்பான காட்சிகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஒப்புக்கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சார்பட்டா பரம்பரை இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு அதிமுக அனுப்பிய நோட்டீஸ் - ஏன் தெரியுமா?
சார்பட்டா பரம்பரை இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு அதிமுக அனுப்பிய நோட்டீஸ் - ஏன் தெரியுமா?

By

Published : Aug 16, 2021, 6:44 PM IST

அண்மையில் சார்பட்டா பரம்பரை என்னும் திரைப்படம், கடந்த மாதம் 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியிடப்பட்டது.

பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

அதிமுக சார்பில் பா.இரஞ்சித்துக்கு நோட்டீஸ்:

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச்செய்தியை இயக்குநர் பா.இரஞ்சித் பரப்பியதாகவும், அதிமுக தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மக்களிடம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் இயக்குநர் பா.இரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து பாபு முருகவேல் அனுப்பிய நோட்டீஸில், ''உண்மையை ஒப்புக்கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது. தமிழ்நாட்டில் ஆளும் அரசாங்கத்திற்கு ஆதரவாக தவறான பரப்புரைகள் மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட தவறுகளும் சார்பட்டா பரம்பரைதிரைப்படத்தில் உள்ளன.

மேலும் பேச்சு வழக்கு, அப்படத்தின் மூலம் பரப்பப்பட்ட அங்கீகரிக்கப்படாத தகவல்களை அகற்றி, உண்மை மற்றும் நிகழ்வுகளை மற்றும் சான்றுகளுடன் நிரூபிக்கத் தேவையான திருத்தத்தையும் படத்தில் செய்ய வேண்டும்.

அதேபோல, 'கருணாநிதியின் மகன் ஸ்டாலின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (MISA)' கீழ் கைது செய்யப்பட்டார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான
உண்மையை ஒப்புக்கொள்ளாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கவும் அதிமுக தயங்காது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பா.இரஞ்சித்தின் காதல் படத்தில் நடிக்கும் காளிதாஸ்

ABOUT THE AUTHOR

...view details