தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அப்டேட் கேட்க இது நேரமில்லை... நேசமணிய முதல்ல காப்பத்துங்க..!' - தயாரிப்பாளர் 'நச்' - நேசமணி

நடிகர் விஜய் - அட்லி இருவரும் மூன்றாவது முறையாக இணையும் 'தளபதி 63' படத்தின் அப்டேட் குறித்து கேட்ட ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.

File pic

By

Published : May 30, 2019, 3:47 PM IST

அட்லி - விஜய் 'தெறி', 'மெர்சல்' ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது மூன்றவாது முறையாக அமைத்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத படத்திற்கு தளபதி 63 என்று தற்காலிகாக டைட்டில் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர், ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பெண்கள் கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். டீசர், ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் 63 படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் தனது சமூகவலைதள பக்கத்தில் படம் குறித்த அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அதில், இப்போது ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் கேட்க சரியான நேரமல்ல, நேசமணிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறி #Pray_For_Neasamani ஹேஸ்டேக்கை குறிப்பிட்டுள்ளார்.

2000-ம் ஆண்டில் வெளிவந்த பிரெண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை காட்சியை மையமாக வைத்து நேற்று மாலை முதலே #Pray_For_Neasamani ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இப்படத்தில் விஜய் அரவிந்த்தாகவும் சூர்யா சந்துருவாகும் நடித்திருந்தனர். இதில் ஒரு காட்சியில் விஜய்யும் சூர்யாவும் நேசமணியை மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். எனவே நேசமணியின் இந்த நிலைமைக்கு இவர்களும் ஒரு காரணமே.

ABOUT THE AUTHOR

...view details