தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனுஷ்கா...நயன்தாரா ரூட்டை பின் தொடரும் தமன்னா...! - நயன்தாரா

‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில், தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

File pic

By

Published : Mar 27, 2019, 1:21 PM IST

தமிழில் தமன்னா தற்போது ‘தேவி-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமன்னா முதல்முறையாக ஹீரோ இல்லாத படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அதே கண்கள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.வி.குமார் தயாரித்தார்.

இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் அடுத்த படத்தை இயக்குவதில் பொறுமை காத்து வந்தார். ஹாரர் காமெடி பாணியில் ஒரு கதையை உருவாக்கியுள்ளார்.

இக்கதையை வெங்கடேசன் தமன்னாவிடம் கூறியுள்ளார். கதை பிடித்து போகவே தமன்னா உடனே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் தமன்னா யாருக்கும் நாயகியாக நடிக்கவில்லை. படம் முழுக்க முழுக்க தமன்னாவின் கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் தமன்னாவுடன் யோகி பாபு, மன்சூர் அலிகான் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் தொழில்நுட்ப கலைஞர்கள், மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details