இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு குறைவாக பதிவாகிறது. இதனிடையே அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
எனினும் தடுப்பூசி குறித்து தவறான வதந்தி பரவுவதால் மக்கள் அதனை தவிர்க்கின்றனர். இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திரை துறையினர், அரசியல் கட்சியினர் பலரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிவேதா இந்நிலையில் நடிகை நிவேதா தாமஸ் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர் நடிகர் விஜய்யின் 'ஜில்லா', ரஜினிகாந்த்தின் 'தர்பார்' உள்ளிட்ட ஒரு சில தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க:தீயாகப் பரவும் தளபதி 65 படத் தலைப்பு? - குழப்பத்தில் ரசிகர்கள்