தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புகைப்பட சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்! - நிவேதா பெத்துராஜ்

மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நடிகை நிவேதா பெத்துராஜ் எடுத்த புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

1

By

Published : Mar 21, 2019, 11:27 PM IST

நடிகை நிவேதா பெத்துராஜ் ”ஒருநாள் கூத்து” என்ற படத்தில் நடிகர் தினேஸுக்கு ஜோடியாக அறிமுகமானார். இதை தொடர்ந்து ’பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’, ’திமிரு புடிச்சவன்’ ஆகியப் படங்களில் நடித்தார். தற்போது, ’பார்ட்டி, ஜெகஜால கில்லாடி, பொன்மாணிக்கவேல்’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நிவேதா பெத்துராஜ், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் பொற்றாமரைக்குலத்தில் அமர்ந்து போட்டோக்களும், கோயில் உள்ளே வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Temple
Temple

நிவேதா பெத்துராஜின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் நிவேதா பெத்துராஜ் தரப்பில் எந்தவித விளக்கமும் இல்லை.

பாதுகாப்பு நடவடிக்கையாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்போனை எடுத்துச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் நடிகை என்பதால் நிவேதாவிற்கு மட்டும் சலுகை காட்டியிருப்பது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details