தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

போதையில் தெரியாம கல்யாணம் செஞ்சுட்டேன்: ஹாலிவுட் நடிகர் - நிக்கோலஸ் கேஜ்

வாஷிங்டன்: போதையில் செய்த திருமணத்தை உடனடியாக செல்லாது என அறிவிக்குமாறு பிரபல ஹாலிவுட் நடிகரான நிக்கோலஸ் கேஜ் அதிர்ச்சி கோரிக்கை வைத்துள்ளார்.

NC

By

Published : Apr 26, 2019, 1:43 PM IST

'கோஸ்ட் ரைடர்', 'கான் இன் சிக்ட்டி செகண்ட்ஸ்', 'நேஷனல் ட்ரேஷர்' போன்ற படங்களில் நடித்துள்ள பிரபல ஹாலிவுட் ஆக்ஷன் நடிகர் நிக்கோலஸ் கேஜ். இவர் அண்மையில் அலங்கார கலைஞரான எரிக்கா கோய்க்கி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத் தம்பதியினர் அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள ஹோட்டலில் பெரும் வாக்குவாதத்துடன் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னணித் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. திருமணமான நான்காவது நாளே நிக்கோலஸ் கேஜ், தன் மனைவி எரிக்கா கொய்க்கியிடம் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக்கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

54 வயதான நிக்கோலஸ் கேஜ் குடிபோதையில் இருந்தபோது தவறுதலாகத் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும், திருமணத்தில் தனக்கு உடன்படு இல்லாததால் திருமணத்தைச் செல்லாது என உத்தரவிடவேண்டும் எனவும் விசித்திரமான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு 34 வயதான எரிக்கா கோய்கி, நிக்கோலஸ் கேஜின் இந்த கோரிக்கை எனது திரையுலக வாழ்க்கையையே பாதிக்கச் செய்துவிட்டது. வேறு காரணத்திற்காக விவாகரத்தைக் கேட்டால் கூட பரவாயில்லை. ஆனால் திருமணமே செல்லாது எனத் தெரிவித்திருப்பது வருத்தத்திற்குரியது, இதற்கு தான் உடன்பட மாட்டேன் என மனம் வேதனையுடன் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details