சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நெட்டிசன்கள் பொழுதுபோக்கிற்காக வித்தியாசமான செயல்களை வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். வீர சாகசம், பாட்டை வைத்து சாகசம் செய்வது என ட்ரெண்டாக்கி வருகின்றனர். அந்த வகையில், 2018ஆம் ஆண்டு வெளிவந்த கிகி சேலஞ்ச் உலகையே கலக்கியது. இதனால் பல உயிரிழப்பு சம்பவங்களும் நிகழ்ந்ததைத் தொடர்ந்து கிகி சேலஞ்ச்சுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
குப்பைத்தொட்டியில் நடக்கும் 'வாக் எ மைல்' சேலஞ்ச்! - நெட்டிசன்கள்
'கிகி சேலஞ்ச்', 'நில்லு நில்லு சேலஞ்ச்', பாட்டில் மூடி சேலஞ்சைத் தொடர்ந்து தற்போது 'வாக் எ மைல்' என்ற புதிய சேலஞ்ச் இணையத்தை கலக்கி வருகிறது.
இதனைத்தொடர்ந்து நாளொரு வண்ணம் புதிய போட்டிகள் அறிமுகமாகி வருகிறது. அண்மையில் பாட்டில் மூடி சேலஞ்ச் பிரபலமானது. இதனை ஹாலிவுட் நடிகர்கள் முதல் கோலிவுட் நடிகர்கள் வரை இதனை செய்து காட்டினர். இந்நிலையில், 'வாக் எ மைல் சேலஞ்ச்' என்னும் போட்டி புதிதாக அறிமுகமாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில், இரு கால்களையும் குப்பைத்தொட்டி, சாலை பிரிப்பு தடுப்பு, காலி குடிநீர் கேன்கள் ஆகியவற்றை கட்டிக்கொண்டு நடப்பது தான் 'வாக் எ மைல் சேல்ஞ்ச்'.
ஆனால், இணையதளவாசிகள் இதனை தவறாக புரிந்துகொண்டு வேறு விதமாக சாகசம் செய்து காயமடைந்து வருகின்றனர். அவர்கள் காயம் அடையம் வீடியோவும் இணையத்தை கலக்கி வருகிறது.