பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்றுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கிறார், ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.
பள்ளி மாணவன் கெட்டப்பில் ஜெயம் ரவி; வைரலாகும் ’கோமாளி’ புகைப்படம்! - jayam ravi
ஜெயம் ரவி பல வேடங்களில் நடிக்கும் ’கோமாளி’ படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜூன் 21ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரிக்க, விதவிதமாக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது ‘கோமாளி’ படக்குழு. கற்கால மனிதன், அரசன், கோபக்கார இளைஞன், வாட்ச்மேன் உள்ளிட்ட எட்டு விதமான கெட்டப்களில் ஜெயம் ரவி இருப்பது போன்ற போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒன்பதாவதாக ஸ்கூல் பையன் கெட்டப்பில் ஜெயம் ரவி இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், சீக்கிரமே ‘கோமாளி’ படத்தின் சிங்கிள் டிராக் வெளியாக உள்ளது.