ஜெயம் ரவி ஜோடியாக ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சயிஷா சைகல். தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜுங்கா’, ‘கஜினிகாந்த்’ ஆகிய படங்களில் நடித்தார்.தற்போது சூர்யா ஜோடியாக ‘காப்பான்’ படத்தில் நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கஜினிகாந்த்’ படத்தில் நடித்தபோது ஆர்யா - சயிஷா இடையே காதல் மலர்ந்தது. இதை ஆர்யா காதலர் தினத்தில் (பிப்-14) ட்விட்டரில் காதலை உறுதிப்படுத்தினார் . இவர்கள் திருமணம் மார்ச் 10 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்துக்குத் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகினர் பலர் கலந்துகொண்டனர்.