தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக இயக்குநர் சங்கத்தில் தீர்மானம் - Tamil Nadu Directors Association

திரைப்படங்கள் குறித்து தரக்குறைவாக விமர்சித்தால் ப்ளூ சட்டை மாறன் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ப்ளூ சட்டை மாறன்
ப்ளூ சட்டை மாறன்

By

Published : Dec 28, 2021, 1:48 PM IST

சென்னை: வடபழனி கமலா திரையரங்கில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் நேற்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இயக்குநர் சங்கத்தின் தற்போதைய உறுப்பினர்கள் பதவிக்காலம் டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், மூன்று ஆண்டு பதவிக்கான தேர்தல் ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது.

இதனையொட்டி கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக இயக்குநர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ப்ளூ சட்டை மாறன் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நிலையில், படங்கள் குறித்து தவறான விமர்சனம் செய்தால் சங்கத்திலிருந்து நீக்கப்படுவார் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க:RRR Pre Release Event 'பாகுபலி சாதனையை ஆர்.ஆர்.ஆர் முறியடிக்கும்' - உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details