தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பத்திரிகையாளர் டூ நகைச்சுவை நடிகர்' - விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி! - காமெடியன்

பத்திரிகையாளர் ஒருவர் தனது விட முயற்சியால் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி உள்ளார்.

mano

By

Published : Aug 28, 2019, 4:24 PM IST

Updated : Aug 28, 2019, 7:36 PM IST

தனியார் பத்திரிக்கை ஒன்றில் பல வருடங்களாக பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் மனோகரன். இவருக்கு ஒரு நோ்காணலின் போது 'தம்பி வெட்டொத்தி சுந்தரம்', 'செளகார்பேட்டை' திரைப்பட இயக்குநர் வ.சி. வடிவுடையானின் அறிமுகம் கிடைத்துள்ளது.

மனோகரனின் நகைச்சுவைத் திறமையைக் கவனித்த இயக்குநர் வடிவுடையான் தனது மூன்றாவது படமான 'பொட்டு' படத்தில் நகைச்சுவை காட்சிகளில் நடிக்க வைத்தார். இப்படத்தில் நடிகர் பரத் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இனியா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் தம்பி ராமையா, ஊர்வசி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அதன்பின் பத்திரிகையாளர் வாராகி நடித்து தயாரித்த படமான 'சிவா மனசுல புஷ்பா' படத்தில் மனோகரன் அரசியல்வாதியாக நடித்துள்ளார். தற்போது மலையாளம், தெலுங்கு இயக்குநர்களின் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு பத்திரிகையாளர் தனது அயராத முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக வளர்ந்திருப்பது தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Aug 28, 2019, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details