தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீதி தேவனின் நேர்கொண்ட பார்வை; அஜித் ரசிகர்கள் உற்சாகம்! - நடிகர் நடிகைகள் பெயர்

'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித் ஏற்று நடிக்கும் கேரக்டரின் பெயர் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை

By

Published : May 26, 2019, 3:24 PM IST

Updated : May 26, 2019, 4:56 PM IST

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வினோத் இயக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகர் அஜித் இப்படத்தில் முதல் முறையாக வழக்கறிஞராக நடிக்கிறார். இப்படம் இந்திப்படமான 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இருந்தாலும் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இதுவரை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டுமே வெளிவந்துள்ளது. நேர்கொண்ட பார்வை படம் குறித்த அடுத்த அறிவிப்புக்கு, ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

அஜித்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இப்படத்தில், அஜித் மற்றும் பிற நடிகர்களின் கதாப்பாத்திரங்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. அஜித்தின் பெயர் நீதி தேவன், வித்யா பாலன் பெயர் குணவதி தேவன், ரங்கராஜ் பாண்டே பெயர் தயாளன், ஆதிக் ரவிச்சந்திரன் பெயர் ஷிவ் ராஜ், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மீரா என்ற பெயரில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியள்ளன. இந்த செய்தி அறிந்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

குடும்பம், குடும்பமாய் விஸ்வாசம் படத்தை தமிழக மக்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Last Updated : May 26, 2019, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details