தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஹாலிவுட் குயினுக்கு கொக்கி போட்ட தமிழ்நாடு அர்னால்ட்! - heroine sheena monin

ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நெப்போலியன் ஹாலிவுட் நடிகை ஷீனா மோனினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

நெப்போலியன்

By

Published : Jul 3, 2019, 11:48 PM IST

புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நெப்போலியன். இதனைத்தொடர்ந்து பரதன், நாடோடி, தென்றல் உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் 'எட்டுப்பட்டி ராசா' படம்தான் கதாநாயகன் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. இதனைத்தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அரசியலில் இணைந்தார்.

அரசியலிலும் வெற்றிக்கொடி நாட்டிய நெப்போலியன் அரசியலை விட்டு விலகி மீண்டும் முத்துராமலிங்கம், சீமராஜா ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் கிறிஸ்துமஸ் கூப்பன் என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விளையாட்டு ஏஜென்டாக நடிக்கும் நெப்போலியனுக்கு ஹாலிவுட் நடிகை ஷீனா மோனின் கதாநாயகியாக நடிக்கிறார். அண்மையில், நெப்போலியன் ஷீனா மோனினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வலைதளத்தில் வெளியாகி அதிவேகத்தில் வைரலானது.

இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நெப்போலியனை தமிழ்நாடு அர்ணால்ட், சீவலப்பேரி பாண்டிக்கு இப்படி ஒரு அழகான நடிகை ஜோடியா என ட்ரோல் செய்து வருகின்றனர். ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் ஷீனா மோனின் தமிழ் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details