தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது - ஆர்.ஜே பாலாஜி - நயன்தாராவின் மூக்குத்தி அம்மன்

'மூக்குத்தி அம்மன்' படத்திற்கு நயன்தாராவின் அர்ப்பணிப்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்று நடிகர் ஆர்.ஜே பாலாஜி கூறியுள்ளார்.

Nayanthara
Nayanthara

By

Published : Jan 12, 2020, 10:01 PM IST

ஆர். ஜே. பாலாஜியும் என்.ஜி. சரவணனும் இணைந்து இயக்கும் 'மூக்குத்தி அம்மன்' படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இதில் ஆர்.ஜே பாலாஜி இணை இயக்குநராக மட்டுமல்லாது படித்தில் நாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, ஆர்.ஜே பாலாஜியுடன் மௌலி, ஊர்வசி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கிறார்.

90 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த மூக்குத்தி அம்மன்

இது குறித்து பாலாஜி கூறுகையில், 'மூக்குத்தி அம்மன்' படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதுதான் எங்கள் குறிக்கோள். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கிய 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். சென்னையில் ஒரு வார படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கிணைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறுகையில், மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துக்கொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே.

நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details