இயக்குநர் விக்னேஷ் சிவனின் 'ரௌடி பிக்சர்ஸ்' தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் 'நெற்றிக்கண்'. இந்தப் படம் ’ப்ளைண்ட்’ என்னும் கொரியப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும்.
மிலந்த் ராவ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவுபெற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. கரோனா பரவல் காரணமாக 'நெற்றிக்கண்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.
'நெற்றிக்கண்' படத்தில் நயன்தாரா பார்வை மாற்று திறனாளியாக நடித்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கிரிஷ் இசையமைத்துள்ளார். நயன்தாரா முதன்முறையாக பார்வை மாற்று திறனாளியாக நடித்துள்ள நிலையில், ரசிகர்களிடையே 'நெற்றிக்கண்' மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தின் டீசரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியாகி சமூக வலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.