'பிகில்’, ‘தர்பார்’ படங்களுக்குப் பிறகு ‘நெற்றிக்கண்’ என்ற படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தப் படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரிக்கிறார். இதன் போஸ்டரை வெளியிட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என ரவுடி பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படப்பிடிப்பு தொடங்கியது! - விக்னேஷ் சிவன்
நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.
Nayanthara in Netrikkan
‘நெற்றிக்கண்’ ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த படத்தின் தலைப்பு. இயக்குநர் பாலசந்தர் தனது கவிதாலயா புரொடக்ஷன்ஸ் மூலம் இந்த படத்தை தயாரித்திருந்தார். எனவே இந்த தலைப்பை கொடுத்ததற்கு, பாலசந்தருக்கும் ரஜினிக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.