தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அது நிச்சயதார்த்த மோதிரம்: ஷாக் கொடுத்த நயன்தாரா - நிச்சயதார்த்த மோதிரம்: ஷாக் கொடுத்த நயன்தாரா

நயன்தாரா தனக்கு விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்

Nayanthara - vignesh sivan
Nayanthara - vignesh sivan

By

Published : Aug 10, 2021, 10:37 PM IST

சென்னை: தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனக்கு விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் நடந்ததை நயன்தாரா உறுதிப்படுத்தியுள்ளார்.

Nayanthara - vignesh sivan

விக்னேஷ் சிவன் - நயன்தாரா காதல் விவகாரம் கோலிவுட் வட்டாரங்கள் அறிந்ததே; இருவரும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நடித்ததன் மூலம் விக்னேஷ் சிவனுக்கு இணக்கமானார் நயன்தாரா. அதன்பிறகு இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

Nayanthara - vignesh sivan

ஒருநாள் நயன்தாரா விரலில் மோதிரம் அணிந்து தன் மீது கை வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்தார். அன்றிலிருந்து அந்த மோதிரம் குறித்துதான் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக இருந்தது. தற்போது மோதிர விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நயன்தாரா.

Nayanthara - vignesh sivan

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நயன்தாரா, அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரம்தான் என ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் நெட்டிசன்கள் பலரும் சந்தேகம் தீர்ந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:உள்ளத்தை கிள்ளாதே: பிரியங்காவை பாடகியாக்கிய வாத்தியார் இமான்!

ABOUT THE AUTHOR

...view details