கோலிவுட்டில் விஜய், அஜித், ரஜினி, ஆர்யா, சூர்யா என டாப் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருப்பவர் நயன்தாரா.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நயன்தாராவும் அவரது காதலர் விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளியில் சுற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் இவர்கள் இருவரும் சென்னையிலிருந்து, கேரளாவுக்குத் தனி விமானத்தில் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் விமானத்தை விட்டு கீழே இறங்கும்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதில் இருவரும் கைக்கோத்தபடியே இறங்குகின்றனர். இதனைக் கண்ட நெட்டிசன்கள், ”நயன்தாரா கையை விடவே மாட்டாருபோல” என கமெண்ட் அடித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆர்.ஆர்.ஆர். படத்திற்காக ஹைதராபாத் பறக்கும் ஆலியா பட்?