‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலித்து வரும் விஷயம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் திருமணம் குறித்து இன்னும் இவர்கள் அறிவிக்காத நிலையில், இந்த ஆண்டிற்குள் திருமணம் நடந்துவிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றும் போது எடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் #loveisintheair என்று குறிப்பிட்டு வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்று (ஏப்.4) ஈஸ்டர் பண்டிகையையொட்டி விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. ”ஈஸ்டர் நாள் மகிழ்ச்சியான நாள்” என்று குறிப்பிட்டு அதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை நயன்தாரா தற்போது, காத்துவாக்குல ரெண்டு காதல், நெற்றிக்கண், மலையாளத்தில் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க:விஜய்யுடன் 4ஆவது முறையாக இணையும் யோகி பாபு?