தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஃபெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய லேடி சூப்பர் ஸ்டார்!

கரோனா வைரஸ் தொற்றால் திரைத்துறையில் ஏற்பட்ட பணி நிறுத்தத்தால், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகை நயன்தாரா நிதியளித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார்
லேடி சூப்பர் ஸ்டார்

By

Published : Apr 4, 2020, 1:42 PM IST

சென்னை: ஃபெப்சி தொழிலாளர்களுக்கு, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துகொண்டே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வேலைக்கு செல்லமுடியாமல் வருமானமின்றி பாதிப்படைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக திரைத்துறைத் சேர்ந்த தொழிலாளர்கள் படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், வறுமையில் சிக்கித் தவித்துவருகின்றனர். அவர்களுக்கும், அவர்களது குடும்பதினருக்கும் உதவத் திரைத்துறையினர் முன்வர வேண்டும் என்று ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்த கோரிக்கையை ஏற்று, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கியுள்ளார்.

இதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, வெற்றிமாறன், பார்த்திபன் உள்ளிட்டோர் நிதியுதவி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 83 லட்சம் ரூபாய் வழங்கிய கோலிவுட் பிரபலங்கள்!

ABOUT THE AUTHOR

...view details