தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

யாக்கர் மன்னனுக்கு வாழ்த்து தெரிவித்த 'மூக்குத்தி அம்மன்' - நடராஜனை வாழ்த்திய நயன்தாரா

சென்னை: 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த யாக்கர் மன்னன் நடராஜனுக்கு நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Nayantara
Nayantara

By

Published : Nov 11, 2020, 12:44 PM IST

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பாகப் பந்து வீசி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நட்சத்திர வீரர்களை, தனது யாக்கர் மூலம் அவுட் செய்து சமூக வலைதளத்தில் யாக்கர் மன்னனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சார்பாகவும் விளையாட இடம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் இவர் காணொலி ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில், ஆர்.ஜே பாலாஜி இயக்கியுள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தை காண தானும்; தனது குடும்பத்தினரும் ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது கிராம மக்கள் ஆர்.ஜே பாலாஜியின் ஐபிஎல் தமிழ் கமென்ட்ரிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் எனக் கூறியிருந்தார்.

இந்த காணொலியைத் தற்போது நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடராஜனுக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

அதில், 'தாங்களும் தங்களது குடும்பத்தினரும் 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தைக் காண ஆவலோடு இருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்திரேலியத் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்ததற்கு வாழ்த்துகள்' எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டை நயன்தாராவின் ரசிகர்கள் தற்போது அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details