சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் பாலிவுட் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர்.
இதனிடையே, நீண்ட நாட்களாக மார்பக புற்றுநோய் சிகிச்சை மேற்கொண்டிருந்த நவாசுதின் சித்திக்கின் தங்கை சியாமா தம்ஷி சித்திக், சனிக்கிழமையன்று (நேற்று) மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் உயிரிழந்தபோது, நவாசுதின் சித்திக் அமெரிக்காவில் நடைபெற்றுவரும் 'நோ லேண்ட்ஸ் மேன்' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்தார்.