தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 10, 2022, 5:20 PM IST

ETV Bharat / sitara

பெண்கள் குறித்து இழிவான கருத்து - சித்தார்த் மீது வழக்குப்பதிவு?

நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி மகாராஷ்டிரா காவல்துறைக்கு, தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.

சித்தார்த்
சித்தார்த்

நடிகர் சித்தார்த், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் ட்வீட் ஒன்றுக்கு ஆட்சேபத்துக்குரிய வகையில் பதிலளித்தது தற்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக சாய்னா நேவால் வெளியிட்ட ட்வீட்டர் பதிவில், "எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாகக் கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். இப்பதிவிற்கு நடிகர் சித்தார்த் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிலளித்திருந்தார்.

சித்தார்த் வெளியிட்ட ஆட்சேபத்துக்குரிய பதிவு

இந்த விவகாரம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை மேற்கொண்டு, மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் அனுப்பியுள்ளது. தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் நடிகர் சித்தார்த் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் ட்விட்டர் தலைமை அலுவலருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட நடிகர் சித்தார்த்தின் சமூக வலைத்தள கணக்கைத் தடை செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், “தான் தவறாக எதுவும் கருத்து கூறவில்லை” என நடிகர் சித்தார்த் விளக்கம் அளிப்பதுபோன்று மற்றொரு ட்வீட்டும் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த்தின் கருத்துக்கு சிவசேனா கட்சியின் மாநிலங்களவை பெண் எம்பி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சித்தார்த்துக்கு பதிலளிக்கும் வகையில் சிவசேனா எம்பி பிரியங்கா சதுர்வேதி, “யார் இதைப் பேசினாலும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. கருத்து வேறுபாடு எதுவாக இருந்தாலும், பேச்சில் நாகரீகம் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:Vikram Vedha Remake - ஹிருத்திக் ரோஷன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details