தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெயம் ரவி படத்தில் தேசிய விருது பெற்ற கலை இயக்குநர்கள்! - ஸ்ரீராம் அய்யங்கார்

‘பாஜிராவ் மஸ்தானி’ , ‘பத்மாவதி’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த கலை இயக்குநர்கள் ஜெயம் ரவியின் புதிய படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

jayam ravi

By

Published : Sep 9, 2019, 6:59 PM IST

‘கோமாளி’ படம் வெற்றியான குஷியில் இருக்கும் ஜெயம் ரவி, ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை இயக்கிய லக்‌ஷ்மண் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். இது அவரது 25ஆவது படமாகும். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நித்தி அகர்வால் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். அதற்கு அடுத்ததாக ‘என்றென்றும் புன்னகை’ , ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார்.

அகமது இயக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கலை இயக்குநர்களாக தேசிய விருது பெற்ற ஸ்ரீராம் மற்றும் சுஜீத் சவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த படத்துக்காக சென்னை மற்றும் துர்மேனிஸ்தான் ஆகிய இடங்களில் 18 கோடி ரூபாய் மதிப்பிலான செட்டுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் ‘கேஜிஎப்’ படத்தின் முதல் பாகத்தில் வில்லனாக நடித்த ராம் (கருடா) முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஹாலிவுட் ஸ்டன்ட் டைரக்டர் கிளென் பாஸ்வெல் சண்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details