பிரபல ஹாலிவுட் நடிகை நடாலி போர்ட்மேன் (38) தனது 13 வயதிலேயே ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற உலகின் தலைசிறந்த விருதுகளைப் பெற்ற இவர், இதற்கு முன்பு வெளியான மூன்று தோர் திரைப்படங்களில், இரண்டில் நடித்துள்ளார்.
தோர் கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் பெண்மணி! - நேடாலியா போர்ட்மேன்
மார்வெல்ஸின் தோர்: லவ் அண்ட் தண்டர் திரைப்படத்தில் முதன்முதலாக ஒரு பெண்மணி தோர் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார்.
நேடாலியா போர்ட்மேன்
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம், தோர்: தி டார்க் வேர்ல்ட் ஆகிய இரண்டு படத்திலும் நடித்த நடாலி, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இதில், தோர்: தி டார்க் வேர்ல்ட் திரைப்படத்தில் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது அந்தக் கவலையைப் போக்கும் வகையில் ‘தோர்’ கதாபாத்திரமாகவே நடாலி தோன்றவுள்ளார்.
தோர் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகும் முதல் பெண்மணி என்ற பெருமையை நடாலி போர்ட்மேன் பெற்றுள்ளார்.