தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிக்பாஸில் இருந்து திடீரென விலகிய முக்கிய நடிகை - namitha marimuthu

பிக்பாஸ் 5ஆவது சீசனிலிருந்து முக்கிய நடிகை ஒருவர் திடீரென விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

namitha-marimuthu
namitha-marimuthu

By

Published : Oct 9, 2021, 7:08 PM IST

சென்னை:பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் பிரபல மாடல் அழகி நமீதா மாரிமுத்து கலந்துகொண்டார். இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முன்னதாக, நமீதா, கதை சொல்லும் டாஸ்கில் 40 நிமிடங்கள் பேசினார். அதில், 10 வயதிலிருந்து உடலில் நடந்த மாற்றங்கள், பெற்றோர்களை எதிர்த்து போராடிய வருத்தங்கள் குறித்து பேசினார்.

இதனிடையே, தாமரைச் செல்விக்கும், நமீதாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்தது. இதுஒருபுறமிருக்க பிக்பாஸ் வீட்டில் வழக்கமாக சனி, ஞாயிறுகளில் போட்டியாளர்கள் கமல்ஹாசனுடன் உரையாடுவார்கள். ஆனால், இன்றைய ப்ரோமோவில் ரிலீஸான நிலையில், வீட்டில் இருக்கும் 17 போட்டியாளர்களும் சோபாவில் அமர்ந்திருந்தனர். அதில் நமீதா மாரிமுத்துவை காணவில்லை. சில தவிர்க்க முடியாத காரணத்தினால் நமீதா போட்டியை விட்டு விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க:பிக்பாசில் வெடித்தது மோதல் - இமான் அண்ணாச்சி தான் காரணமா?

ABOUT THE AUTHOR

...view details