தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஒப்பற்ற வில்லனின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம்! - நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் சென்னையில் நடைப்பெறயிருக்கிறது

நடிகர் நம்பியாரின் நூற்றாண்டு விழாவானது திரையுலகில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் 19ஆம் தேதி  சென்னையில் பல பிரபலங்கள் கலந்து கொள்ளும் வண்ணம் நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெறயிருக்கிறது.

Nambiar centenary festival to be held on Nov

By

Published : Nov 15, 2019, 4:52 PM IST

தமிழ் சினிமாவில் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு பெயர் போன நடிகர் என்றால் அது நடிகர் நம்பியார் தான். நடிகர் எம்.ஜி.ஆருக்கு வில்லனாக மிகவும் பொருந்திப் போனவர். கடந்த 2008ஆம் ஆண்டு இயற்கை எய்திய நம்பியாரின் நூற்றாண்டு விழாவானது, இந்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வருகிற நவம்பர் 19ஆம் தேதி, அவர் மறைந்த தினத்தில் நூற்றாண்டு விழா சென்னையில் நடக்கவுள்ளது.

இதுகுறித்து நம்பியாரின் பேரன் சித்தார்த் கூறுகையில், 'நடிகர் நம்பியார் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் தனது 89 வயது வரை நடித்து வந்தார்' எனக் கூறினார்.

மேலும் சினிமாவில் வில்லனாக நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவே நம்பியார் திகழ்ந்தார் எனக் கூறிய சித்தார்த், இந்த நூற்றாண்டு விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, முன்னாள் டிஜிபி விஜயகுமார் உள்பட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கலைமாமணி விருது பெற்ற விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details