உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரசால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, படப்பிடிப்பு இல்லாததால், திரைத்துறைச் சேர்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். அந்தக் கோரிக்கையை ஏற்று பிரபல நடிகர் நாகார்ஜுனா ஒரு கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.