ரசிகர்களின் விருப்பமான ஜோடியான சமந்தா, நாக சைதன்யா தங்களது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையை அக்டோபர் மாதம் முடித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். இருவரும் தற்போது வரை தாங்கள் ஏன் பிரிந்தோம், என்பது குறித்து ஒரு முறை கூட பொது மேடையில் கூறவில்லை.
இந்நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.