நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி, சமீப காலமாக இளைஞர்களைக் கவரும் வகையில் படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளி வந்த 'நட்பே துணை', 'மீசைய முறுக்கு' ஆகிய திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஆதி நடிக்கும் மூன்றாவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 'நான் சிரித்தால்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தை இயக்குநர் ராணா இயக்க உள்ளார்.